ஞாயிறு, 26 மார்ச், 2023

ஆகச் சிறந்த காதல்; ஆகச் சிறந்த அரசியல்

A)ஆகச் சிறந்த காதல் :


அந்த வீடு, இன்னும் எனக்கு ஞாபகம் இருக்கிறது; சுமார் 25ஆண்டுகளுக்கு முன்பு அழைப்பிதழின் பேரில் சென்றபோது அந்த வீடு பழைமை காத்தது. பெரிய திண்ணை. பிறகு முற்றம். நல்ல பரந்த வழிநடப்புகள்.

சிறிய அறை ; பெரிய சமையல் அறை. என்ன சொல்ல !!! அந்த வீட்டைப் பார்ப்பதற்காகவா சென்றான் சாமி ?

இல்லை; இல்லவே இல்லை. அந்த அழகை ,தேவதையை அவள் குடியிருக்கும் வீட்டில் பார்ப்பதற்கு ஏதோ சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொண்டு போக வேண்டிய தருணம் பார்த்து போனான் என்பது தான் உண்மை !

அந்த உரையாடல்கள், விதவை அம்மா, சகோதரன் கல்யாணம் ஆகவில்லை;கரிசனங்கள்; கவனிப்புகள் என்று எல்லாம் பிடித்து இருந்தது சாமிக்கு .

அப்போ , எதற்கு இந்த ஒப்பனை.எல்லாவற்றையும் அடுத்த நாள் சொல்லிவிட வேண்டியதுதான் என்று நினைத்து காத்து இருந்தான்.

அவளே சொன்னாள் : எனக்கு முறைப்படி வரும் ஞாயிறு பெண் கேட்டு வருகிறார்கள். அதற்காக முதல் நாள் சனிக்கிழமை நாங்கள் குடும்பமாக குலதெய்வ வழிபாடு செய்ய வேண்டி இருப்பதால் ' விடுப்பு வேண்டும்' என்று நீட்டினாள் கடிதத்தை.

சாமி, மேலாளர் அமோதித்தார்; அனுமதித்தார்; இதயம் கேட்டது :-
"இனிமேல் அப்படி சொல்லாதே என்று யாரை கேட்பது ?"

B)ஆகச் சிறந்த அரசியல் :

நன்றாகவே தெரியும், இந்த காரியத்தை செய்தால் எதிர்வினை இப்படித்தான் இருக்கும் என்று .


எதற்கும் தன் நெருங்கிய ,ரகசிய நபர்கள் சிலருடன் இதைப் பற்றி யோசித்து , இந்த source ஐ பயன்படுத்தி இந்த lead ஐ பிடித்து ஒரு அரசியல் செய்ய வேண்டும் என்று மேலிடம் சொல்வதாக பகடி அடினான் தலைவன்.

"ஏன், செய்தால் என்ன ? இதில் ஒன்றும் நமக்கு இழுக்கு " இல்லை என்று ஒரு சாரரும்; 'இருந்தாலும் நாமும் அக்கா, தங்கையுடன் பிறந்து இருக்கிறோம் எதற்கு இந்த வம்பு ' என்று மற்றொரு சாரரும் தங்கள் கருத்துக்களை முன் வைத்தனர்.

எல்லாம் "காலத்தால் மறக்கப்படும், அல்லது மறைக்கப்படும்" என்கிற 'நியதி' உண்மை என்பதை உணர்ந்த தலைவன் தன் "இரண்டு" செயலாளரிடமும் இப்படிச் சொன்னான்.

உங்கள் இருவரில் ஒருவர் நம் கட்சியை விட்டு விலகுவதாக அறிவித்து அதற்கு காரணம் "நீதி கேட்டேன் ; நிதி வந்தது " என்று சொல்ல வேண்டும் என்றும் ;அதற்கு மறுநாள் 'தான்' ஒரு press meet ஏற்பாடு செய்து அதற்கு விளக்கம் அளிப்பதாகவும் சொன்னார்.

இருவரும் கைநீட்டினர்- எவ்வளவு தொகை கொடுப்பதாக இருக்கிறீர்கள் !?

அடுத்த நாள் செய்தி :

அந்த உறுப்பினர்கள் இருவரும் கட்சியின் அடிப்படை பதவியில் இருந்து நீக்கப்பட்டனர்.


சிறுதுளிகள் :-
++++++++++

குளங்கள் குட்டைகள் அன்று மருதம்;

வீடுகள் விடுதிகள் இன்று ஆனது;

ஏரிகள் எல்லாம் எளிதாய் மாறிட,

மருதம் இனிமேல் பாலையாய் காண்பாய்!




காலங்கள் ; கோலங்கள்
+++++++++++++++++++


பகலில் வேடம் ; இரவில் ஆட்டம்,

இப்படிச் செய்தால் , எப்படிச் சொல்வது,

உழைத்து உண்ண கரங்கள் இருக்க;

வாயை விற்று வாழ்வது சாதலே !!!


Selvaraj raman

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக