சமூகத்தால் புறக்கணிக்கப்பட்ட ஒரு கவிஞனின் கதைதான் 'A Poet'.
இதுவொரு Spanish மொழி திரைப்படம்.
Genre:Tragic comedy film.
இந்த வருடம் (2025)மே மாதம் நடந்த கேன்ஸ் திரைப்படவிழாவில் இத்திரைப்படம் பங்கெடுத்து பரிசையும் வென்றது.
கவிஞர் கதாபாத்திரத்தில் நடித்த உபிமர்ரியாஸின் தோற்றம் ஓரளவிற்கு நமது நடிகர் நாகேஷின் தோற்றத்தை ஒத்துயிருக்கும்.
கதாபாத்திரத்திற்கேற்ற அருமையான தேர்வு இந்த நடிகர்.
Spoiler alert:வேலையில்லை;அதனால் சமூகத்தில் மதிப்புமில்லை.
மனைவியும் பெண் பிள்ளையும் இவரை விட்டு பிரிந்து சென்று விட்டனர்.
பென்ஷன் வாங்கி பிழைப்பை ஓட்டும் அம்மாவின் தயவில் வாழ்ந்து வருகிறார் கவிஞர் ஆஸ்கர்.
தீரா குடிப்பழக்கமும் உண்டு.சில வேளைகளில் நடைபாதையிலேயே தூங்கியும் விடுவார்.
பெண்பிள்ளை மீது மிகுந்த பாசம் உடையவர்.மனைவியால் அவமானப்பட்டாலும் மகளைப் பார்ப்பதற்காக செல்வார்;பேசுவார்.செலவுக்கு மகளிடமிருந்து பணமும் வாங்கிக் கொள்வார்.
இரண்டு,மூன்று கவிதைத் தொகுதிகளை வெளியிட்டும் தனக்கு சமூகத்தில் தனக்கு சரியான அங்கீகாரம் கிடைக்க வில்லையே என்கிற கவலை இவருக்கு எப்பொழுதுமே உண்டு.
"அம்மா மட்டும் இல்லேன்னா இந்த வீடு கூட உனக்கு கிடைச்சு இருக்காது"என்று சொல்லி அவமானப்படுத்துவாள் இவளுடைய சகோதரி.
இருந்தாலும் அவளே இவருக்கு ஒரு பள்ளிக் கூடத்தில் Poetry teacher வேலை வாங்கிக் கொடுக்கிறாள்.
வேலைக்கு செல்கிறார்.தனது வகுப்பில் உள்ள ஒரு மாணவியை தேர்ந்தெடுத்து கவிதையில் புலமையாக்க முயற்சிக்கிறார்.அவளும் இவருடைய முயற்சியின் மீது அக்கறை கொண்டு கவிதை எழுதுவதில் முயற்சி எடுக்கிறாள்.
கவிதைப் போட்டியில் கலந்து கொண்டு முதல் பரிசும் வாங்குகிறாள்.
அதனால், பள்ளி நிர்வாகம் சந்தோஷமடைந்து பார்ட்டி ஒன்று வைக்கிறது.
அந்த பார்ட்டியில் அந்த மாணவி மதுபானத்தை அதிகமா அருந்தி நிலைகுலைகிறாள்.வாந்தி எடுக்கிறாள்.
அவளை வீட்டில் கொண்டு போய் சேர்க்கும் பொறுப்பு இவருடையதாகிறது.
சுயநினைவேயில்லாமல் இருக்கும் அவளை தனது காரில் ஏற்றிக்கொண்டு அவளுடைய வீடு நோக்கி செல்கிறார்.
வீட்டை அடைந்தவுடன் அவள் இருக்கும் நிலையைப் பார்த்து தன் மீது சந்தேகப்படுவார்கள் என நினைத்து அவளுடைய வீட்டின் படிக்கட்டின் மீது போட்டு விட்டு செல்கிறார்.சத்தம் போட்டு வெளியே வரும் அவளுடைய வீட்டார் இவள் இருக்கும் நிலையையும் அவர் வேகமாக காரில் ஏறி செல்வதையும் பார்க்கின்றனர்.
சூழல்,அவரை அயோக்கியனாக சித்தரிக்கிறது.அவளுடைய அண்ணன் அவரை நையப்புடைக்கிறான்.
பணத்தாசை பிடித்த அந்த பண்பாடற்ற குடும்பம் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அவரிடமிருந்து பணத்தை பிடுங்க நினைக்கிறது.
பள்ளி நிர்வாகம் பணத்தைக் கொடுத்து அவர்களை சரிகட்ட நினைக்கிறது.
இவரோ பணத்தைக் கொடுத்தால் தான் ஒரு குற்றவாளி என்பதை ஒத்துக்கொள்வது போல் ஆகிவிடும் என்று நினைக்கிறார்.
இதற்கிடையில் மகளும் தந்தையின் மீது சந்தேகம் கொள்கிறாள்.வெறுக்கிறாள்.தன்னால் அவருக்கு ஏற்பட்ட நிலையை புரிந்து கொண்ட மாணவி கவிஞரின் மகளுக்கு கடிதம் ஒன்றை எழுதி அனுப்புகிறாள்.
தந்தையைப் பற்றி தவறாக நினைத்ததை நினைத்து வருந்துகிறாள்.
தந்தை எழுதிய புத்தகத்தை அலமாரியிலிருந்து எடுத்து படிக்க ஆரம்பிப்பதோடு படம் முடிகிறது.
இந்தப் படத்தில் கவிஞராக நடித்த Ubeimar rios-க்கு இதுதான் முதல் படம் என்பதை நம்ப முடியலே.அந்த அளவிற்கு கேரக்டரை புரிந்து கொண்டு மிகவும் இயல்பாக நடித்துள்ளார்.
Co-Produced and Directed by Simon Mesa soto.
இவர், கொலம்பியா நாட்டு திரைக்கதையாசிரியர் மற்றும் இயக்குநருமாவார்.
இவர் இயக்கிய Leidi and Madre குறும்படங்களின் மூலம் பல சர்வதேச விருதுகளைப் பெற்றுள்ளார்.
இவருடைய முதல் Feature film-ஆன 'Amparo' வும் 2021-ஆம் ஆண்டில் நடந்த கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது.
விரைவில் OTT-ல் வரும்.அவசியம் பாருங்கள்.
சேனலை மறக்காமல் Subscribe செய்யுங்கள்.கருத்துக்களை தெரிவியுங்கள்.நண்பர்களுக்கும் பகிருங்கள்.
நன்றி,வணக்கம்.
சே மணிசேகரன்
*****************************************
https://solvanam.com/2016/10/14/ரெயினர்-மரியா-ரில்கே-போய/?utm_source=perplexity
*****************************************
Letters to a Young Poet
நண்பரே! உலகின் மீது நாம் அவநம்பிக்கை கொள்வதற்கு எந்தக் காரணமுமில்லை. தீவிரவாதம் உள்ளதெனில் அது நம்முடையதுதான். பாதாள மெனில் அது நமக்குரியதுதான். அபாயங்கள் உள்ளதெனில் அதை நேசிக்கக் கற்றுக்கொள்ளவேண்டும். தனிமையை நேசிக்கவேண்டும்: அது வேதனை தருவதாக இருந்தாலும் தனிமையை ஏற்கப்பழகுவது வாழ்க்கையின் அர்த்தத்தைப் புரியவைக்கும். நம் போராட்டத்தின் அழகைக் கண்டறிய வேண்டும். அது உண்மையையும் ,நேர்மையையும் உணரச்செய்யும்.
நண்பரே! தீர்மானிக்கப்படாத விஷயங்களுக்கான கேள்விகள் மனதிலிருக்கும். ஆனால் அவைகளுக்கு இப்போது பதில்கிடைக்காது. பதில்களோடு வாழமுடியாத நிலை நமக்கிருப்பதால் எதற்கும் பதில் தேடாதீர்கள். எல்லாவற்றோடும் வாழவேண்டும். கேள்விகளோடு இப்போது வாழுங்கள். நீங்களே அறியாதபடி எதிர்காலத்தில் அந்த பதிலாகவே வாழ நேரலாம்
வாழ்க்கை முரண்பாடுகளால் ஆனது. பகுத்தறிவான பதிலை எல்லாவற்றிலும் எதிர்பார்த்தால் நம்மை நாமே சித்திரவதைபடுத்திக்கொள்வோம்
முழுமையற்ற அறிவுதான் ஒவ்வொரு மனிதனின் விதி என்னும் போது சுயத்தை அறியவேண்டிய வைகறையாக கேள்விகளை விரும்ப வேண்டும். நாம் யாராக இருக்கவேண்டும்,இப்படி ஏன் வாழ்க்கை என்று எல்லாவற்றி லும் கேள்விகளைக் கேட்டுக் கொண்டு நம்மை வருத்திக் கொள்ளாமல் அந்தத் தருணத்தைத் தழுவிக் கொள்ள வேண்டும். வாழ்வது, அனுபவம் பெறுவது என்ற இரண்டும் நமக்கானவை.எல்லாவற்றையும் புரிந்து கொள்ள முடிவதில்லை. காலப்போக்கில் பதில்கள் மேல் விழுவோம்.
நிகழ்காலத்தைவிட கனவுகள் மேலானவை என்று சொல்ல முடியாது. நிகழ் காலமும்,எதிர்காலமும் ஒன்றுதான்.நாம் எதிர்காலத்தைப் பற்றி நம்புவது நிகழ்காலத்தை மாறச்செய்கிறது.நம் கனவுகள் நிகழ்தருணத்தை மாற்றுகின் றன.நம்முடைய மனப்பாங்கு நாம் எதிர்கொள்ளும் விஷயங்களை நல்லதாக்க, தீயதாக்க முடியும்.நம்முடைய முடிவுதான் அதை நிறப்படுத்துகிறது உலகம் நமக்கு மகிழ்ச்சியைத் தரவேண்டுமென்று விரும்பினால் நம்மை மாற்றிக் கொள் ளத் தயாராகவேண்டும். அழகும் கொடுமையும் என்று உனக்கு எல்லாம் நடக்கட்டும்.போய்க் கொண்டேயிரு.எந்த உணர்வும் முடிவல்ல.
**************************************
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக