செவ்வாய், 16 ஜூன், 2026

தாந்திரீக தாம்பத்தியம்

குடிப்பதற்கு தண்ணீர் இல்லாதபோது, இளநீர் எப்படி இருக்கும்? பன்னீர் (ஒபிஸ் இல்லை ) எப்படி இருக்கும்? என்று கேட்கும் வேடிக்கை மனிதர்கள், கோராவிலும் உண்டு போலும்!

நம் ஊர் பெண்களிடம் அவ்வளவு லேசில் எதையும் வாங்கி விட முடியாது. ஒரு ஐந்து ரூபாய் அதிகம் கேட்டால், பஸ் கண்டக்டர் உடன் சண்டை போடும் பெண்கள், பூக்காரி, பால்காரன், காய்கறி கடைக்காரன் என்று யாருக்குமே, பெண்கள் அரை மணி நேரம் பேரம் பேசாமல் தங்களிடம் உள்ள பணத்தை கொடுக்க மாட்டார்கள்.

அவ்வளவு ஏன், கட்டின புருஷனுக்கு கூட ஒரு பத்து ரூபாய் கொடுப்பதற்கு, ஆயிரம் கேள்விகள் கேட்பார்கள்.

அதுவும் அவர்கள் நம்மை பார்த்து எதிர் கேள்வி கேட்பதில், income tax டிபார்ட்மென்ட் தோற்றுவிடும்.

பெண்களிடம் பணம் மட்டுமல்ல எது கேட்டாலும், பதிலுக்கு கேள்விதான் கேட்பார்கள். எல்லாவற்றிற்கும் நம்மையே கேள்வி கேட்பார்கள்! அதுவும் நமது மொத்த பரம்பரையையும் கேவலமாக பேசி, நம்மை ஏதோ குற்றவாளி கூண்டில் நிற்க வைத்து கேட்க்கும் எதிர்க்கட்சி வக்கீல் கேள்வி கேட்பது போல் கேட்பார்கள். அவர்கள் நம்மைப் பற்றி நம்மிடமே சொல்லும் தகவல்களை கேட்கும் போது, நமக்கு தாம்பத்தியம் மட்டுமல்ல, "எதுவுமே தெரியாத ஒரு மட சாம்பிராணி நாம்" என்பது போல் ஒரு தாழ்வு மனப்பான்மை நமக்கே ஏற்படும்!

நாம் அவர்களிடம் ஏதாவது கேட்க போய், தேவையில்லாமல் நம் குடும்பத்துக்கே கெட்ட பெயர் வாங்கிக் கொள்வோம்.

அதுவும் பணம் கேட்டுப் பாருங்கள், அவர்களின் இன்னொரு முகம் வெளியே வரும்!

ஒரு நூறு ரூபா கொடு! சம்பளம் வந்தவுடன் கொடுக்குறேன்!

எதுக்கு?

டீ, காபி குடிக்க தான்!

டீ காபிக்கு 100 ரூபாயா? இப்படித்தான் ஏமாந்து போறீங்களா??

இல்லடி, டீ காபி மட்டுமா, பசிக்கும் அப்போது வடை, பஜ்ஜி போண்டா சாப்பிட..

பசிக்கும்போது நான் கொடுக்கும் டிபன் பாக்ஸ் சாப்பிடுங்க. உங்கள பாத்து பசங்க கெட்டுப் போறாங்க!!

சரி, பஜ்ஜி சாப்பிடல! உன்ன பொண்ணு பார்க்கும் போது நான் சாப்பிட்ட பஜ்ஜி க்கு பிறகு பஜ்ஜி சாப்பிடும் ஆசையே விட்டு போச்சு!!

இதுதாங்க உங்களோட பிரச்சனை. ஏதாவது ஒன்னு கேட்டா சமந்தா சம்மந்தம் இல்லாம பேசுவது! எதுக்கு 100 ரூபாய் இன்னும் பதில் சொல்லவில்லை, ஏதேதோ பேசுறீங்க!

ஆபீஸ் ல பார்ட்டி! அதுக்கு ஆளுக்கு 100 ரூபாய் கொடுக்க வேண்டும்!

அப்படி ஒரு பார்ட்டிக்கு நீங்க போக தேவையில்லை. உங்க கஞ்ச பிசினாரி முதலாளியை பார்ட்டி செலவு செய்ய சொல்லுங்க! ( என்னமோ நான் சொல்லித்தான் அந்த முதலாளி எல்லாம் செய்வது போல் சொல்கிறாள்??)

போன மாசம் 1000 ரூபாய் ஊருக்கு போனதுக்கே இன்னும் அவர் முழு பணம் கொடுக்கல, 500 ரூபா தான் கொடுத்தாரு!

இதை என்கிட்ட நீங்க சொல்லவே இல்ல. அந்த 500 ரூபாய் என்ன ஆச்சு?

ஐயோ!! 100 ரூபாய் கேட்க போய், 500 ரூபாய்க்கு உளறி விட்டோமே!!

சரி, வேண்டாம், நான் ஆபீசுக்கு கிளம்புறேன்.

முதல்ல எனக்கு அந்த 500 ரூபாய்க்கு கணக்கு சொல்லிட்டு கிளம்புங்க!

அம்மா தாயே என்ன உடு, எனக்கு நூறு ரூபாயும் வேணாம், தாம்பத்தியமும் வேண்டாம், பொண்டாட்டியும் வேண்டாம்!!

கதற விடுவார்கள்!

கையில் உள்ள பணத்தையே அவ்வளவு லேசில் கொடுக்காத பெண்கள், தாம்பத்தியம் அல்லது காமம் போன்ற தங்களிடம் உள்ள விலையுயர்ந்த பொருட்களை, உங்களுக்கு எளிதில் கொடுப்பார்கள் என்று ஆண்கள் நம்பினால், அவர்களைப் போல் முட்டாள்கள் கிடையாது!

சொல்லப்போனால் சம்பளம் முழுவதும் கொடுத்தால் கூட, அல்வா செய்து கொடுப்பார்கள், ஆனால் தாம்பத்தியம் என்பதே கிடைக்காது. காரணம் அவர்களுக்கே அது தெரியாது! தன் பிறந்த வீட்டு மகிமை, புருஷனின் மடமை தவிர எதுவும் தெரியாத பெண்களுக்கு, நீங்கள் உட்கார வைத்து பாடம் எடுத்தால் கூட தாம்பத்தியம் பற்றி தெரிந்து கொள்ள மாட்டார்கள். அப்படி சாதாரண தாம்பத்தியத்திற்கு இஷ்டம் இல்லாத பெண்களிடம், தாந்திரீக தாம்பத்தியம் கேட்டால், கிலோ என்ன விலை? என்று நம்மையே கேட்பார்கள்.

அவர்களுக்கு எதற்கு தெரிய வேண்டும்? காரணம் தாம்பத்தியம் என்பது ஒரு கை ஓசை இல்லை. இரண்டு கைகள் சேர்ந்து தட்டும் ஒரு சங்கீதம்!

உங்களுக்கு மட்டும் காமசூத்திரா, காமத்துப்பால் அனைத்தும் தெரிந்திருந்தால் போதாது. எந்த தாம்பத்தியமாக இருந்தாலும், அதை நீங்கள் தனியாக செய்ய முடியாது.

தாம்பத்தியம் என்பது புருஷன் பொண்டாட்டி சண்டை போடுவது மாதிரி.

பயங்கரமாக சண்டை போடுவதற்கு ஒரு பெண்ணுக்கு, ஒரு புருஷன் வேண்டும். தன் கணவன் இல்லாமல் தன்னந்தனியே ஒரு பெண் சண்டை போட்டுக் கொள்ள முடியாது. ( அதற்குத்தான் மாமியார் இருக்கிறாரே? என்று விதண்டாவாதம் பேசக்கூடாது!)

அதுபோல்தான் தாம்பத்தியம். பொண்டாட்டி இல்லாமல் ஒரு புருஷன், தன்னந்தனியே சந்தோஷம் அடைய முடியுமா? முடியும். ஆனால் அதற்கு பெயர் சுய இன்பம்! அதற்குப் பெயர் தாம்பத்தியம் கிடையாது.

கணவன் இல்லாமல் மனைவியால் சண்டை போட முடியாது. மனைவி இல்லாமல் கணவனால் தாம்பத்தியம் அடைய முடியாது.

இந்த தாம்பத்தியத்தை விளக்குவதற்கு இவ்வளவு எழுத வேண்டி உள்ளது. சுருக்கமாகச் சொல்கிறேன், இரண்டு பேர் சேர்ந்து செய்வது தான், அது!

அடுத்து தாந்த்ரீகம் என்றால் என்ன?

முதலில் நினைத்ததை அடைவதற்கு மூன்று முறைகள் நம் வழிபாட்டு முறைகளில் உள்ளன. மந்திரம், எந்திரம், தந்திரம் என்று சனாதானத்தில் ( நம்ம உதயநிதி சொல்லும் சனாதானம் இல்லை ) மூன்று விஷயங்கள் சொல்வார்கள்.

கடவுளை அடைவதற்கு, மூன்று வழிகள் உண்டு. மந்திரத்தின் வழியில் அடைவது, மிகவும் கடினமான வழி. அதற்கு படிக்க வேண்டும்.

எந்திரத்தின் மூலம் அடைவது, என்பது சக்கரங்கள் மற்றும் உலோகங்கள் போன்றவை பயன்படுத்தி ஒரு பொருளை வைத்து அடைவது. இதற்கு அறிவு வேண்டும்.

மூன்றாவதாக தந்திரம். தாந்திரீக முறையில், நீங்கள் வாழ்க்கையில் எதை வேண்டுமானாலும் அடையலாம். அதற்கென்று சில வழிமுறைகள் உள்ளது.

மந்திர மூலம் அடைவது மாந்திரீகம் என்றால், தந்திரம் மூலம் அடைவதுதான் தாந்திரிகம். காமத்தின் மூலம் கடவுளை காண்பதற்கான ஒரு வழிதான், தாந்திரீக தாம்பத்தியம்.

சுவையான ட்ரிவ்யா தகவல் வழக்கம்போல்:

தியானம், யோகா போல் தான், காமம். நம் சனாதன தர்மத்தில் அதாவது ஹிந்து மதத்தில், மூன்றுக்குமே ஒரே இடம்தான் வைத்துள்ளார்கள்.

ஆனால் கொடுமை என்னவென்றால், முதல் இரண்டு விஷயங்களையும் பெண்கள் மிகவும் விரும்புகிறார்கள். ஆனால் மூன்றாவது விஷயத்தை ஆண்கள் மட்டும் தான் விரும்புகிறார்கள்.

நீங்கள் எவ்வளவு எடுத்துச் சொன்னாலும், காமம் என்பது கடவுளை அடையும் ஒரு யோக வழி என்று கிளிப்பிள்ளைக்கு செல்வது போல் சொல்லிக் கொடுத்தாலும், அந்தப் பாடத்தை பெண்கள் புரிந்து கொள்வதில்லை. காரணம் அதில் ஆர்வம் இல்லை.

ஆண்களுக்கு படிப்பு புரியவில்லை. காரணம் அதில் ஆர்வம் இல்லை. ஆனால் நீங்கள் காமசூத்திரத்தை படித்து இன்றே நீங்கள் அதை செய்ய வேண்டும், என்று சொன்னால் ஆண்கள்தான் Gold medal வாங்குவார்கள். பெண்கள் அந்த வகுப்புக்கு கூட வர மாட்டார்கள்.

ஆண்களுக்கு காமக்கலை சொல்லிக் கொடுப்பது போல், எங்களுக்கு தையல் கலை அல்லது எம்பிராய்டரி கலை போல் வேறு ஏதாவது சொல்லிக் கொடுக்க முடியுமா? என்று கேட்பார்கள்.

இது ஒரு மிகப்பெரிய முரண்பாடு என்றால், இன்னொரு முக்கியமான வித்தியாசமும் உண்டு. யோகா நீங்கள் தனியாக செய்யலாம். தியானம் நீங்கள் தனியாக செய்யலாம். காமம் என்பது தனியாகச் செய்ய முடியாது. அதுவும் தாம்பத்தியம் என்பது, தனியாக செய்வதற்கு வாய்ப்பே இல்லை.

பெண்களுக்கு காமத்தில் ஆர்வம் குறைந்து கொண்டு வருகிறது. காரணம் இனி உலகத்தில் குழந்தைகள் தேவை இல்லை. அவ்வளவு குழந்தைகள் பிறந்து விட்டன. அதனால்தான் இயற்கை பெண்கள் காமத்தை கொஞ்சம் கொஞ்சமாக குறைக்கிறது. காமம் தேவையில்லை என்றால் தாம்பத்யமும் தேவையில்லை. தாம்பத்தியம் தேவை இல்லை என்றால் கல்யாணமும் தேவையில்லை. அதனால்தான் இன்று இளைஞர்கள் கல்யாணம் செய்து கொள்வதில்லை!

கடைசியாக முடிக்கும் முன்பு நான் ஒரு ஜோக் சொல்கிறேன்.

புருஷனும் பொண்டாட்டியும், ஞாயிற்றுக்கிழமை வீட்டில் இருக்கும் பொழுது, தொலைக்காட்சியில் செய்தி வருகிறது.

முக்கிய செய்தி : இன்றோடு உலகம் அழியப்போகிறது. நாளை பூமி இருக்காது. பயங்கரமான எரிகல் ஒன்று மோதி எல்லா மனிதர்களும் பஸ்பமாக போகிறார்கள். உலகத்திற்கு இன்றுதான் கடைசி தினம் என்று அறிவிப்பு வெளியிடுகிறார்கள்!

இதைக் கேட்ட தம்பதிகள் இருவருக்கும் பயங்கர ஷாக்!

கணவன் வேறு மாதிரி சிந்திக்கிறான். மனைவியிடம் சொல்லுகிறான்,

" கண்ணே! இன்னும் இருப்பது ஒரே ஒரு நாள். நாம் எல்லோருமே சாகப் போகிறோம். அதனால் அந்த ஒரு நாள் முழுவதும், நாம் இருவரும் திகட்ட திகட்ட காமத்தை அனுபவித்து இறந்து விடுவோம்! சரியா?? "

" ஏங்க இப்படி எல்லாம் பேசுறீங்க? இன்னும் இருப்பது ஒரே ஒரு நாள். நாம உலகம் அழியற வரைக்கும் கண்ணை மூடிக்கொண்டு இருவரும் தியானம் செய்வோம். இருக்கும் இந்த பொன்னான வாய்ப்பை பயன்படுத்தி, உலகம் அழிவதற்கு முன்பு, கடவுளை நினைத்து தியானம் செய்வோம்!" சீக்கிரம் கண்ணை மூடுங்கள்!

இதைக் கேட்டு விட்டு, கணவன் சிரிக்கிறான்.

ஏன் , இப்படி உலகமே அழியப் போற ஒரு பயங்கரமான சோகத்திலும் சிரிக்கிறீங்க?

எல்லாருக்கும் தாண்டி நாளை உலகம் அழிய போகுது! எனக்கு கல்யாணம் பண்ணிக்கிட்ட அன்னைக்கே இந்த உலகம் அழிஞ்சு போச்சு!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக