புதன், 11 பிப்ரவரி, 2026

கரையெல்லாம் செண்பகப் பூ.

சுஜாதா: என்ன வகை எழுத்து?      
--
புதுமைப்பித்தன் 'சாபவிமோசனம்'
போலவோ,தி.ஜானகிராமனின் 'சிலி
ர்ப்பு'போலவோ கு.ப.ரா வினுடைய ' ' "விடியுமா?போலவோ,கு.அழகிரிசாமி
யின் கதைகள் போலவோ சுஜாதாவின்
வாசகனுக்கு எதிர்பார்ப்பில்லை‌.எழுத்தி
ற்கேற்ப தன் வாசகர்களைக் கச்சித
மாகத் தயாரித்து வைத்திருந்தார்.

ஒரு கதையில் ஆம்பிளைங்க செய்
யற  அத்தனை காரியத்தையும் இந்த பெண்களால் செய்யமுடியுமா' என்று
கேட்டார்.ஆணைப்போலப் பெண்ணா
ல்  உயரத்திற்கு ஸ்விங்..என்று ஒண்
ணுக்கடிக்கமுடியுமா என்று கேட்டார்.
இது நகைச்சுவை.   பின்னால் ஒரு சினிமாவில் அவர் எழுதிய வசனமாக
வும் வந்தது.இந்தமாதிரி வசனங்களு
க்காகவே எழுத்தாளர் சாவி அவரைத்
தூக்கிவைத்துக் கொண்டாடினார்.40
வருஷம் அதிதிரளான வாசகர்களைத்
தன் மடியில் உட்கார்த்தி வைத்துக்
கொண்டிருக்க முடிந்தது சாதனை
தான். "என் வீட்டு சலவைக் கணக்குத்
துண்டுப் பேப்பரை வாங்கிப் பிரசுரிக்
க பத்திரிகை இருக்கிறது என்று ஸ்டே
ட்மெண்ட் விடுமளவிற்குப் பிரபலப்
படுத்திக்கொண்டார்.சாவி அவரது
சலவைக் கணக்கு நோட்டுப் புத்தகக்
குறிப்புகளையும் தன் பத்திரிகையில்
வெளியிட்டார் என்பதுண்டு.

அதேநேரம் இன்னொருவேலையை
யும் உடன் செய்துகொண்டிருந்தார்.பார
தியின் "காக்கைப் பார்லிமெண்ட்" நம்
புதுமைப்பித்தனின் 'கடவுளும் கந்த
சாமிப்பிள்ளையும்" போன்ற படைப்பு
களையும் அவ்வப்போது பேசிவந்தார்.
"காசளவில் உலகம்" என்ற கதையை
யும் அப்போதுதான் வெளியிட்டார். 

சுஜாதாவிற்குக் கைக்கொடுத்தவை சிறுகதைகள்தாம்.அவ்வப்போது நிக
ழும் நிகழ்ச்சிகளைத் துண்டு துணுக்
குகளாக்கிச் சுவாரசியப் படுத்தினார்.
இடைவெளி ஏதுமில்லாமலிருக்க இந்தத்துணுக்குகள் உதவின.நடுத்தர
வர்க்கங்களின் பிரச்சனைகள்தாம்
தேசத்தின் பிரச்சனைகள்.தேசத்தை
வெறுப்பதற்கும் ஆனந்திப்பதற்கும்
நிறைய விஷயங்கள் இவருக்கு அரு
கிருந்தன.கொண்டாடுவது அல்லது
துயரத்தில் ஆழ்ந்து புலம்புவது என
" ரெண்டுங்கெட்டான்தனம்" நடுத்தர
வர்க்கத்தின் வாழ்வியல் அடிப்படை.
சுஜாதா இதைக் கெட்டியாகப் பிடித்து
க்கொண்டார்.

அவரது கதைகளில்"சில வித்யாசங்க
ள் முக்கியமான கதை.'நான் ராஜாரா
மன் டில்லிவாசி நேபாளத்தின் தலை
நகரம் தெரியாததாலும் ஆஸ்ரேலியா
வின் ஜெனத்தொகை தெரியாததாலு
ம் ஐஏஎஸ் தொடராமல் மத்தியசர்க்கா
ர் செக்ரட்டேரியட்டில் ஒரு சாதாரண
210-10-290-15-150 சம்பள ஏணியில்
இருப்பவன் என்று தொடங்குகிறார்.
அட.. ..இது நம் கதை என வாசகனும்
விழுந்தடித்துக் கொண்டு வருகிறான்.

கொஞ்சம் நேரமிருந்தால், மனசிருந்
தால் சிறுபத்தியை தட்டி நீட்டி  ஒரு
புதினமாக ஆக்கிவிடலாம்.தத்துவத்
தேடல்களோ ஆழ்மனப் பிரச்சனை களோபிரதானமல்ல.மனிதனின் வெ
ற்றிகரமான அனுபவங்களோ பெரிதி
ல்லை.எதையும் வாசகனிடம் கொடு
த்து படிக்க வைத்து விடுவது. இதை
அறிவித்துவிட்டே எழுதினார்.

புதுமைபித்தனைப் படித்ததும் சுதந்தி
ரமாக அவருடைய பாதிப்பு இல்லாமல்
எழுதத் தைரியம் வேண்டும்.நன்றாக
எழுதபவர்களின் பட்டியலில் உள்ள
அனைவரிடமும் புதுமைப்பித்தன்
பாதிப்பு இருப்பதை எந்தக் கோர்ட்டி
லாம் சாட்சியாகச் சொல்லத்தயார்
என்றார்.நல்லஎழுத்து கைவசப்பட்டும்
வலிந்தே ஜனரகப்படுத்தினார்.அறிவி
யல் வளர்ச்சிக்கேற்ப கலைகளையும்
இலக்கியங்களையும் மாற்றியமைக்
கும் முயற்சி இருந்தது.

எழுத்து என்பது தினம்தினம் உட்கார்
ந்துகொண்டு கட்டாயமாக எழுதுவது,
நெஞ்சிலிருக்கும் மேதைத்தனம் என்ற ஜீவஒளிக்குக்   காத்திருப்பது அன்று..  திரும்பத்திரும்பத் திரும்ப அதையே
எழுதுவது,    மகிழ்ச்சியோ  வலியோ
எழுதுவது, எழுதியதில் திருப்தியில்
லாமல் நிறையக்கிழித்துப்போடுவது
எழுதியதில்  துளி திருப்தி இல்லாமல் இருப்பது, மேலே எழுதுவது சுஜாதாவி
ன் அடிப்படை எழுத்து நியாயம் என்பது
இதுதான்.அநேக பத்திரிகைக்காரர்
கள் அவர் வீட்டுத்திண்ணையில் காத்
குக் கிடந்தனர் என்பதும் உண்மையே.

வாழ்க்கை சாசுவதமான அவதானிப்பு
தான்.பாத்திரங்கள் மாறிக்கொண்டிரு
ப்பார்கள்.ஒன்றுமட்டும் உண்மை.இரு
ப்பது ஒரேபிறவி.வாழ்வது ஒரேமுறை
தான்.எனவே வாழ்க்கை ஒன்றன்று.
நிறைய தடவை நாம் இங்கு வாழ்
ந்திருக்கிறோம்.இந்த அடிப்படைதான்
சுஜாதா எழுத்தின் சூட்சுமம்‌.மின்னல்
வெட்டும் நடை என்பது இலக்கிய 
வளமை கனத்தைக் சிதைத்துவிடும்‌.
துப்பறியும் கதைகளுக்கேயுரியது.
ஆனால் இந்த மின்னல் வெட்டும் ஓரு நடைதான்  பின்னால்  நம் சுஜாதா
வின் அசல் நடையாக மாறியது.வாசக
ரோடு இந்த நடையால் மனம் விட்டுப்
பேசமுடியாது.லாசரா வாசித்த வாச
கர்களுக்கு சுஜாதா எந்தவகையிலும்
பொருத்தமற்றவர்.

தி.ஜா,எம்விவி,க.நா.சு,கு.ப.ரா,மௌனி, கு.அழகிரிசாமி,புதுமைப்பித்தன்
போன்றோரின் எழுத்துக்களை அறி
ந்திருந்தாலும் கவைக்குதவாது எனப்
புரிந்திருந்தார்.புகழுக்கோ,பெயருக்
கோ,பிராபல்யத்திற்கோ ஆகாது என்
பதில் தெளிவாக இருந்தார்.ஒரு படை
ப்பாளி புகழ்பெற விரும்புவது பிழை
யில்லை‌.எப்படி புகழடைகிறார் என்ப
துதான் மிகமிக முக்கியம்.தொண்டர்
படையின் மூலமோ, சந்தைப்படுத்து
தல் மூலமோ அதை நிறைவேற்ற
முயல்வது சரியானதா என்று கேள்வி
தவிர்க்க முடியாததுதான். கரையெல்
லாம் செண்பகப் பூ...வாசித்தபோது....
....
---
(என் கட்டுரையின் பகுதி)
--மீள்*

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக