வெள்ளி, 2 பிப்ரவரி, 2024

ஐந்திணை இருநூற்றைம்பது நூல் வெளியீடு - இடம் YMCA. நந்தனம்.




Booksellers and Publishers Association of South India. 
BAPASI 2024

தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்தின் (பபாசி) தலைவராக எஸ்.வயிரவன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ‘பபாசி’ என்று அழைக்கப்படும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்தின் தேர்தல் கடந்த 26-ம் தேதி நடைபெற்றது

இதில் ‘குமரன் பதிப்பகம்’ எஸ்.வயிரவன் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ‘நாதம் கீதம்’ எஸ்.கே.முருகன் மீண்டும் செயலாளராகவும், ‘லியோ புக்ஸ்’ ஏ.குமரன் பொருளாளராகவும், ‘வனிதா பதிப்பகம்’ பெ.மயில வேலன் துணைத் தலைவராகவும் (தமிழ்), ‘மதுரை, சர்வோதய இலக்கியப்பண்ணை’ வி.புருஷோத்தமன் துணைத் தலைவராகவும் (ஆங்கிலம்), ‘முல்லை பதிப்பகம்’ மு.பழநி இணைச் செயலாளராகவும், ‘உணவு உலகம் பப்ளிகேஷன்ஸ்’ இராம.மெய்யப்பன் துணை இணைச் செயலாளராகவும் (தமிழ்), ‘டைகர் புக்ஸ்’ எஸ்.சுப்பிரமணியன் துணை இணைச் செயலாளராகவும் (ஆங்கிலம்) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

அதேபோல், நிர்வாகக் குழு (தமிழ்) உறுப்பினர்களாக ‘நக்கீரன்’ ஆர்.தனுஷ், ‘ஐஎஃப்டி’ ஐ.ஜலாலுதீன், ‘புலம்’ லோகநாதன், ‘தமிழ்ச் சோலை பதிப்பகம்’ எஸ்.பிரபாகரன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். மேலும், நிர்வாகக் குழு (ஆங்கிலம்) உறுப்பினர்களாக ‘மயூரா புக்ஸ்’ ஏ.கேளியப்பன், ‘ஸ்பைடர் புக்ஸ்’ ஐ.முபாரக், ‘டெக்னோ புக்ஸ்’ நந்த் கிஷோர், ‘ஜெய்கோ’ கே.ஸ்ரீராம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். நிரந்தரப் புத்தகக் காட்சி உறுப்பினர்களாக ஜே.ஹரி பிரசாத், ஏ.எஸ்.மகேந்திரன், எஸ்.ராம்குமார், ஆர்.சங்கர் ஆகியோர் தேர்வாகியுள்ளனர். தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள் அனைவரும் நேற்று பொறுப் பேற்றுக் கொண்டனர். இவர்கள் 2023-ம் ஆண்டு வரை இப்பதவிகளை வகிப்பார்கள்.

ஞாயிறு, 17 செப்டம்பர், 2023

வாழ்க்கை என்பது எவ்வளவு தூரம்?

எவ்வளவு தூரம்;

எவ்வளவு தூரம்;

எவ்வளவு தூரம்,

அளக்க முடியவில்லை;
எல்லை இல்லா வாழ்வு;
எதற்கு இப்படி அலைகிறது;


மனமே பேதம் கொள்ளாதே;
உன் குணம் எனக்கு தெரியும்.


உறவை , நட்பை , பழக்க,
வழக்கத்தை , மாண்பை, மதிப்பை,
மதி இழக்க செய்ய வல்ல,
ஆற்றல் உனக்கு இருக்கிறது.


என்ன செய்ய ?
பாவி மனிதர்கள் நாங்கள் !

படைக்கப்பட்டோம்,
வளர்க்கப்பட்டோம்,
வாழ்வதற்காக வழிகாட்டப்பட்டோம்.

பார்வை எல்லாம் பறக்கின்றன.
நான் மற்றும் ஒன்றை ஆளாய் நிற்கிறேன்.


என்ன செய்ய......
இனி என்ன செய்ய முடியும்...
என்ன செய்ய வேண்டும்...
சொல்- உன்னிடமே கேட்கிறேன்.


பிறப்பு என்பது ஜனனம்.
தெரியாமல் நடக்கிறது.
இறப்பு என்பது மரணம்.
தெரிந்தே நடக்கிறது.

நடப்பதை நிறுத்த முடியாது.
முயற்சிக்கிறோம்; முடிந்த வரை போராடுகிறோம்.

பிரிவும் இயற்கையே !!
வாழ்வும் இயற்கையே!!
இறப்பும் இயற்கையே!!
இதில் ஏங்க என்ன இருக்கிறது ??


சொல்ல எளிதாக இருக்கிறது - நினைத்தால் சுடுகிறது.

எவ்வளவு நாள் இந்த எண்ணங்களை சுமப்பது ?

சுமப்பது சுவை ;
அப்படியானால் எதை சுமப்பது,
எதிர் காலத்தையா ?
நிகழ் காலத்தையா ?
இறந்த காலத்தையா?


சொல் மனமே சொல் .
என் மனசு எனக்கு தெரியவில்லை.
என் இதயம் துடிப்பது எனக்கு உணர்த்துகிறது.


என் துல்லல் தொடர்ந்து இந்த பிரபஞ்சத்தில் இருந்து கொண்டு என்னை ஆட்டி விக்க வேண்டும்.

ஆட்கொள்ள வேண்டும்.

என் " இதயம்" என் "மனதை" ஆட் கொள்ள வேண்டும்.

இறைவா,
இயற்கையே,
எல்லாம் வல்ல பரம்பொருளே,
வழி செய்,
வழி செய்,
வழி செய்....


வழி செய்வாயாக ..........

செவ்வாய், 5 செப்டம்பர், 2023

இப்படித் தான் இருக்க வேண்டும்

வயது 70 ஐ கடந்து இருக்கும். அடர்ந்த புருவம் .எடுத்து வாறி கட்டிய முடி .சடை போடவில்லை.

நல்ல சிவப்பு நிறம். பார்த்தால் ஐரோப்பியர் என்று சொல்லிவிடலாம்.

 இடம் : ஐராதீஸ்வரர் கோயில், தாராசுரம்.

காலை 7.30 மணி சனிக்கிழமை. தனியாக கோயிலில் வலம் வந்து கொண்டு இருந்தார்.

 நான் தினமும் அங்கே நடைப்பயிற்சி மேற்கொள்வேன்.

அவர் தெய்வநாயகி அம்மன் உடன் உறை ஐராதீஸ்வரர் சாமி கோயிலுக்குள் நுழைவதைக் கண்டேன். 

ஏதே என்னுள் மனசு தவித்துக் கொண்டு இருந்தது. அது அவரை நோக்கி நடக்க செய்தது .

கால்கள் நிடந்தன .அவர் வெளி கோபுரத்தை பார்வையிட்டார்.மிதுவாக நடந்தார் .பிறகு பன்புறம் உள்ள விமானத்தை பார்த்து அதை கமேரவிற்குள் பதிவு பார்த்து ஏற்றுக் கொண்டார்.

பிறகு ஒவ்வொறு கற்சிற்பத்தை உற்று நோக்கி அங்கேயே 3 நிமிடங்களுக்கு மேல் நின்று பார்த்து, சிலாகித்து, உணர்ந்து, குறிப்புகளை எடுப்பது என்னை பெரிதும் ஆச்சரியதிற்கு உள்ளாக்கியது.

அவரிடம் மெதுவாக சென்று என்னை அறிமுகம் படித்துக் கொண்டேன்.

அவர் ஆங்கிலத்தில் புரியும்படி பேசினார்; தன்னை ஒரு ஜெர்மானியர் என்றும் சொன்னார்.

நான் அவரிடம் அக்கறை இருப்பது போல் காட்டிக் கொள்ளலாம் என நினைத்து 'ஏதாவது லோக்கல் கைட்டு கொண்டு தெளிவு பெறலாமே என்று சொன்னவுடன் என்னை ஒரு பார்வை பார்த்தார்.

நீ எல்லாம் இந்த மண்ணின் மைந்தன் ; என்ன தெரியும் உனக்கு எல்லாம்' ! என்பது போல் இருந்தது.

சற்றே சுகாரித்துக்கொண்டு மீண்டும் பேச்சை தொடர்ந்தேன் - அவர் தன்னைப் பற்றிய சிறு குறிப்பை என்னிடம் பகிர்ந்து கொண்டார்.

"நான் ஜெர்மனியில் உள்ள "குட்டன் பெர்க்" என்ற நகரில் இருந்து வருகிறேன் ; உங்களுக்கு தெரிந்து இருக்கும் , முதன்முதலில் எழுத்தை காகிதத்தில் அச்சடித்து புரட்சி பண்ணிய ஒரு வரலாற்று சிறப்பு மிக்க நகரம் அது " என்றார்.


'ஆமாம் தெரியும் என்றேன்' இதற்கு எதிர்வினையாக 'நான் பல சிற்பங்களை ஆய்வு செய்து வருவதாகவும், பல கோயில்களுக்கு சென்று வந்ததாகவும் கூறினார்'.

இங்கு வருவதற்கு முன்பு திரு தெய்வநாயம் (தொல்பொருள் ஆய்வாளர் கரந்தை , தஞ்சை) அவர்களை சந்தித்து வந்தேன் ,அவர் பல குறிப்புகளும், வியக்கங்களுடன் கூடிய புத்தகத்தை எனக்கு பரிசளித்தார் என்று அவர் சொன்னதும் நான் வாயடைத்து நின்று விட்டேன்.

எத்தனை பேருக்கு தெரியும் தீரு தெய்வநாயகம் - தராசுரம் ஐராதீஸ்வரர் கோயிலை பாரம்பரிய சொத்தாக மாற்ற காரணமாய் இருந்த முன் முதற் சிற்பி என்பது. 

வணங்கினேன் என் ஜெர்மானிய நண்பரை .அவர என்னை தட்டிக் கொடுத்து தமிழ் மரபு அறக்கட்டளை நடத்தும் முனைவர் மற்றும் தலைவர் சுபாஷணி யின் குழுவில் இணைந்து பல இடங்களுக்கு பயணப் பட்டு இருக்கிறேன் என்று சொன்னவுடன் எனக்கு மயக்கமே வந்து விடும் போல் இருந்தது. 

தமிழ் மேல் உள்ள ஆர்வம் ஒரு ஜெர்மானியரை தமிழராக மாற்றி இருக்கிறது.

அவர் என்னிடம் பகிர்ந்து கொண்டவை:

- தமிழர், தமிழர் நாகரிகம், வாழ்வியல், வானவியல், மருத்துவம், உணவு என பல நூல்களை ஜெர்மானிய மொழியில் கற்று வைத்து உள்ளார்.

- உங்கள் ஐராதீஸ்வரர் கோயிலில் உள்ள சிற்பங்களில் பல வரலாற்று உண்மைகள் புதைந்து இருக்கின்றன;

- மகாபாரத போர் ஒரு உதாரணம்,

- தமிழர்கள் நடனக் கலையில் சிறந்து விளங்கினர் என்பதற்கு இங்கே உள்ள கலை கல் வெட்டுகளே சாட்சி !!

- கோயில் விமானத்தின் அழைப்பு ஒரு போர் களத்தில் உள்ள தேரைப் போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது.

- இந்த தேரை இழுக்க தமிழனின் பிராதன போர் விலங்கான யானைகள்; மேலும் இதன் மீது வாள் ஏந்தி போராடும் பெண்கள் என கூடுதல் சிறப்பு.

அவர் மேலும் தொடர்ந்தான் - அவரே தமிழர் ; நான் தமிழனாக மாற முயற்சிக்கும் ஒரு தமிழன்.

பண்டைய காலத்தில் ( சோழர் காலத்தில் ) தமிழர்கள் வாழ்வியலில் பெண்கள் குடுபத்தில் முதன்மை பெற்றும், வீரத்தோடும், விருப்பப் படியும் வாழ்ந்து பெருமை சேர்த்த பெண் இனம். அவர்களது தன் மானம், தன்னம்பிக்கை, தற்சார்பு பல புராணங்களை ஆங்கிலத்தில் படித்து தெரிந்து கொண்டதாக தெரிவித்தார்.


சோழர் காலத்தில் பெண்கள் ஆண்களை விட இயல், இசை , நாடகம் ஆகிய பண்பாட்டு தளங்களில் தங்கள் விடையங்களை ஆழ பதிவு செய்து விட்டு சென்று உள்ளனர்.

கல்வி என்பது அறம் சார்ந்தும், பாலியல் என்பது உணர்வு சார்ந்தும் பெண்கள் தங்கள் விலத்திற்கு ஏற்ப ஆண் மகன்களை தேர்வு செய்தும் இருந்ததாக சொல்லப்படுகிறது.

ஆண்கள் கட்டிட கலையில் சிறந்து விளங்கினர். மேலும் ஆண்களே அரசர்களாகவும் , அதிக அளவில் புலவர்களாகவும் இருந்தார்கள் என்பது குறிப்பிடத் தக்கது.

பாலியல் வன் கொடுமைக்கு மாறாக அதைப் பற்றிய ஒரு புரிதல் இருந்தது.
குழந்தை பிறப்பை சிற்பங்களாக பல கோவில்களில் இன்றும் காணலாம்.


புறம் பேசுவதும், புற முதுகு காட்டுவதும் ஆண்களுக்கு அழகு அல்ல.

இவ்வாறாக அவர் பேசிக் கொண்டே போனார்.

நான் அவரிடம் ஒன்று சொல்லிவிட்டு வந்தேன்.

உங்கள் ஆய்வுகளை ஒரு புத்தகமாக வெளியிடும் போது அதன் ஒரு பிரதியை எனக்கு அனுப்பி வைக்கும் படி சொல்லிவிட்டு என் முகவரியை கொடுத்து மேலும் தபால் மற்றும் இதர செலவுகளுக்காக ரூ 1000 ஐ அவரிடம் நீட்டினேன்.

முகவரியை பெற்றுக் கொண்ட அவர் , இந்த பணத்தில் நல்ல பயனுள்ள தமிழ் புத்தங்களை உங்கள் நூல் நிலையத்திற்கு பரிசளிக்குமாறு என்னிடம் திருப்பி கொடுத்து விட்டார்.

அங்கனம் எனக்கு தெரிந்தது ஒன்று தான்.நாம் ஒன்றாக சேர்ந்து ஒரு இயக்கத்தை - நூலக இயக்கத்தை முன்னெடுக்க வேண்டும் என்பதே ?

இந்த கால சந்ததியை படிக்க வைக்க வேண்டிய மேலான பொறுப்பு நமக்கு அதிகம் இருப்பதாக உணர்கிறேன்.

இரண்டு நிலையில் மனிதன் தன் மனதை ஆட் கொள்கிறான்.


ஒன்று - விளையாட்டு,

இரண்டாவது - வாசித்தல்.


புத்தக வாசித்தல் ; நானே இதற்கு ஒரு காரணியாக இருக்க வேண்டும் என்று நினைத்து அநுதினமும் (பிரதி வியாழன் விடுமுறை) எங்கள் வீதி " சிவ குருநாதன் செந்தமிழ் " நூல் நிலையத்திற்கு சென்று படித்து வருகிறேன்.

படிக்க, பிறரிடம் விவாதிக்க, நல்ல பண்புகளை வளர்த்தெடுக்க வாசிப்போம் ! வாசிப்போம் ! வாசிப்போம் !!!

















வியாழன், 3 ஆகஸ்ட், 2023

கவிஞர்களே !! உங்கள் கவனத்திற்கு !!!

வணக்கம். ஐந்திணை ஐந்நூறு நூலிற்கு, 

       குறிஞ்சி திணையில் எழுதுபவர்கள் பாலை திணையிலும்  
       முல்லை திணையில் எழுதுபவர்கள் நெய்தல் திணையிலும்  
  மருதம் திணையில் எழுதுபவர்கள் நெய்தல் திணையிலும்  
       நெய்தல் திணையில் எழுதுபவர்கள் முல்லை திணையிலும்  
       பாலை திணையில் எழுதுபவர்கள் முல்லை திணையிலும் 


2 பாடல்கள் இயற்றி அனுப்பி வைக்க இறுதி நாள் 31-08-2023. தமிழில் எழுதினால் அவமானமில்லை வருமானம் என்பதை உலகிற்கு எடுத்துரைக்கும் வகையில் இந்த நூலில் ஆசிரியராகப் பங்கெடுக்கும் பாவலர்கள் அனைவரையும் புத்தகக் காட்சி மேடையில் விலைமதிப்புள்ள ஒன்றோடு நாம் சிறப்பிக்கும் வண்ணம் சில முயற்சிகளை முன்னெடுத்து வருகிறோம். நிச்சயம் வெற்றி பெறுவோம். ஆகவே 2 பாடலா.. மரபா.. என மனம் தளராமல் தாங்கள் முழு மனதோடு பங்கேற்று வெற்றி பயணத்தில் உடன் வர ஒவ்வொருவரையும் தமிழன்போடு அழைக்கிறோம். இணையாதவர்கள் இணைய விரும்பினால் இணைந்து கொள்ளலாம். இந்த நூலில் இணையாமல், குழுவில் இருப்பவர்கள் குழுவிலிருந்து விலகாமல் குழுவில் தொடர்ந்து பயணிக்கலாம். நாம் முன்னெடுக்கும் அடுத்தடுத்த முயற்சிகளில் உங்களுக்கு விருப்பமான நிகழ்வுகளில் பங்கெடுக்கலாம். நன்றி. 


மரபில் பாடல் இயற்ற தெரிந்தவர்களுக்கு மட்டும் இந்த அறிவிப்பு

கவிஞர்கள் பயிற்சி எடுத்து ஆசிரியப்பாவில் பாடல் இயற்ற இருப்பதால், மரபில் பாடல் இயற்ற தெரிந்தவர்கள் வேறு பா வகைகளில் பாடல் இயற்றி ஐந்திணை ஐந்நூறு நூலினை அலங்கரிக்குமாறும், பாடல், திணை சார்ந்த ஒரு கதைக் களத்தினை கொண்டிருக்க வேண்டும் என்பதையும் நினைவில் கொண்டு படைக்குமாறும் அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். உதாரண கதைக் கள பாடல் ஒன்று கீழே கொடுக்கப்பட்டுள்ளது. 


Tamil speech..tamil Azagu
https://youtu.be/u1SOVIH00b4


பாடல் 20 வரிகளுக்குள்ளும், பாஸ்போர்ட் அளவு புகைப்படத்தோடு தங்களைப் பற்றிய சிறு குறிப்பு 5 வரிகளுக்குள்ளும் இருக்குமாறு தட்டச்சு செய்து 9445473609 என்ற புலனத்திற்கு அனுப்பி வைக்கும் படி தமிழன்போடு கேட்டுக் கொள்கிறோம். நன்றி.


கல்லை கூட்டி குவித்து வைத்திருக்கும்என்னை நீவிரும் அறியலையோ...குன்று குன்றாய் இருக்கும் என்னைகுற்றப் படுத்தி கவி வடித்தாலும் குறிஞ்சி நான் குன்றா புகழ் புவியில் உமக்குத் தந்திடுவேன்நெட்டை குட்டை பச்சை சிறகாகிகொட்டும் வெயிலில் குடையாகதொட்டு பேசும் தென்றலுக்கும் தெவிட்டா இன்பம் கொட்டிடும் என்னை கூட்டி குறுக்கி கவி வடித்தாலும்-புகழ் கொட்டி கொட்டி முல்லை நான் தந்திடுவேன் ஓடும் ஆறும் கூட தேடும்பாடும் பச்சை புற்களின் கீதம்சாடும் நீளம் சகதி சங்கதிகள் பேசும்மாடும் ஆடும் வாழுமிடம் அறியலையோ.....பாட்டாய் கவிதை வடிக்கலையோ.....எப்பாடுபட்டு உழைத்தாலும்எம்பாட்டுக்கு பலன் உமக்கு மருதம் நான் தந்திடுவேன் அலையும் மணலும் கை தட்டும்ஆலை இருப்பது அறியலையோஆரவாரம் அடங்காமல்அலையாய் குதிப்பது காணலயோசிலையாய் எண்ணி கவிதை வடித்தாலும்குலையா புகழ் நெய்தல் நான் தந்திடுவேன் வளங்கள் கெட்டு போன என்னை- நல் மனங்கள் கொண்ட நீவிரும்...மதிமறந்து போனீரோ....மண்ணாய் கிடக்கும் என்னைமன்னித்தேனும் கவி வடித்தாலும்வளங்கள் கிடைக்க உம் கவியும் வரமென்றேவாழ் நாளெல்லாம் பாலை நான் மகிழ்ந்திடுவேன் புதுக் கவியினில் கரமேனும் நீட்டுங்கள் நூலினில் எங்களுக்கும் இடம் தாருங்கள்இயற்கை திணைகள் என்பக்கம் இணைந்திருந்துஐந்திணை ஐந்நூறின் பக்கம் நிரப்பிடுங்கள்உங்கள் பக்கம் நாம் நின்று உள்ள மகிழ்வு தந்திடுவோம்இனியும் கேட்டு சொல்லை சிதைத்தல் ஆகாதுஇதயம் கொண்டு நெல்லை கொறித்தல் ஆகாதுஉதயம் எட்டு வரும் முன்னேஉம் கவிதை எட்டும்படி செய்திடுவீர்உயர் புகழும்...உம்மொழிக்கு உய்திடுவீர்


http://www.avalokitam.com/analyzer

 என்ற இணையதளம் புதுக்கவிதையை பா வகையில் மாற்றிட உதவி செய்கிறது. இதுவரை ஐந்திணை ஐந்நூறு நூலிற்கு பாடல்களை அனுப்பாதவர்கள் பயன்படுத்திக் கொள்க.

வியாழன், 30 மார்ச், 2023

யாருக்காக?

 "படிக்கும்போதே ஒரு குறிக்கோளுடன்படிக்க வேண்டும்.


நம்முடைய இலக்கு என்ன?

எதற்காக படிக்கிறோம்?

இந்த சமுதாயத்தில் நம் பங்கு என்ன?-

என்பதைப் பற்றிய 'புரிதல் ' நம்முடைய குழந்தைகளுக்கு அறவே இல்லை என்றே சொல்ல வேண்டும்."

மகன் +2 வகுப்பிலும் , மகள் 10th வகுப்பிலும் படித்துக்கொண்டு இருக்கிறார்கள். அவர்களுக்கு இன்னும் 60 வருட வாழ்க்கையை (அமைத்துக் கொடுப்பது) பற்றி அலுத்துக் கொண்டே 'என்ன நான் சொல்வது சரிதானே ? என்ற படி காலை பத்திரிகை செய்திகளை படித்துக் கொண்டே வந்த காப்பியை சிறிது தொண்டையில் மூழ்கிய படியே வினவினார் !


எல்லாம் சரி, ஆனா ஒன்றும் எனக்கு சரியாக படலே ;

என்னடி ;? ஆமா போங்க, நாளு நாளா நம்ப சமைய பாத்திரம் சுத்தம் செய்றவங்க வரவே இல்லை ;

நானும் போன் பண்ணி பார்த்தேன். எடுக்க மாட்டேங்கிறாங்க,

நம்ப பையனை ஸ்கூல் போகும் போது பார்த்து விட்டு போகச் சொன்னேன்.

எங்க கேட்கிறாங்க? - உங்க மகளைப் பற்றி பேசவே வேண்டாம் .அப்படி வளர்கிறேள்.

"என்ன பரத நாட்டியம், கலை , ஒவியம் என்று கற்று பயன்"

பெற்ற தாய்க்கு ஒரு கஷ்டம் என்று வந்தால் பதற வேண்டாமோ?

'நீ சொல்றது நன்னா எனக்கு புரியுது; என்னை என்னச் செய்ய சொல்ற '

ஒண்ணும் செய்ய வேண்டாம். என் குறைய மட்டும் சொன்னேன்.அவ்வளவுதான்.

முடிந்தால் வேறு ஏற்பாடு செய்யவும்; இல்லையேல் எல்லோரும் சேர்ந்து "Swiggy" ஆர்டர் பண்ணி சாப்பிடுங்க.


-"எனக்கு மட்டும் தான் என்னால் சமைக்க முடியும்" - அந்த நொடியில் அவள் வாழ்ந்தாள்.


அடிப்பாவி ; இப்படி சுயநலக்காரியாகி விட்டியே !!! இது அடுக்குமா ????


எழுந்து தன் அண்ணாரைப் பார்த்தாள். பார்த்த பார்வை அப்படியே இருந்தது.

அவர் மீது சாய்ந்தாள்.

திங்கள், 27 மார்ச், 2023

நாம் எல்லோரும் நடிக்கப் பிறந்தவர்கள்.

தேவகி, ஒரு சமுக செயல்பாட்டாளர்; எழுத்தாளர்; ஒவியர் என்று பல முகத்தன்மை கொண்டவர்.


அவருக்கு இப்போது வயது 80 ஆகிறது. இன்றும் அவரை சந்தித்து நேர்காணல் காண "காட்சி ஊடகங்கள் காத்து இருக்கின்றன.


அவருடைய பேச்சு இப்போது அதிகம் பகிரப் பட்டு வருகிறது.


ஒரு நிருபர் அவரிடம் பேட்டி காணும் போது :


"மேடம், நீங்கள் சமூக அக்கறை கொண்டவர்; பெண்கள் விஷயத்தில் குரள் கொடுக்கத் தவறியது இல்லை. அது அவர்களுடைய 'உடையைப்

பற்றியோ, மதரீதியான தடைகள் பற்றியோ - 'அடிப்படை நீதி'-எல்லா மனித குலத்திற்கும் பொருந்தும் என்றும் பேசிவந்து உள்ளீர்கள்".



என்னுடைய நேரடியான கேள்வி?

"பூனை நடை" என்கிற பெயரில் நடிகைகளும், அவர்களைப் பின் தொடர்ந்து பெண்கள் ( பள்ளி, கல்லூரி உட்பட) தங்களை கேளிப்பொருளாக காட்டிக் கொண்டு , முக நூலிலும், இன்ஸ்டாகிராமிலும் பகிர்ந்து வருவதை எப்படி பார்க்கிறீர்கள் ?


ஒரே வார்தை; அதுவே வாக்கியம். இது ஒரு மாயை. Like பெருவதற்காக செய்யப்படும் ஒரு "விளையாட்டு வலை," . சிறிது காலம் களித்து புளித்து விடும். மனிதனுக்கு மறதியே வரம்.


இது தனி மனித உரிமை; மேலும் இந்த செயல் பிறர் மனதை , மதத்தை, இனத்தை புண்படாத விதத்தில் இருக்கும் பட்சத்தில் இதை ஒரு 'பொழுது போக்காக' எடுத்துக் கொண்டு கடந்து செல்வதே மேல்!


ஆண் தன்னை ஆளுமையாக காட்டுக் கொள்ள பல வழிகளை நாடுகிறான். இதுவும் ஒருவகையில் பெண்கள் தங்கள் "ஆளுமையை " இந்த வழியில் வெளிக் கொணர்கிறார்கள் என்று எடுத்துக் கொள்ள வேண்டயது தான்.


இதில் பெண்மை, கற்பு என்று தொடர்பு படுத்தி பேசுவது அபத்தம். இது ஒரு மனப்போராட்டத்தின் வெளிப்பாடு; இதை ஏற்றுக் கொள்வதும்; நிராகரிப்பதும் அந்த அந்த சமூகத்தின் சிந்தனைக்கு விட்டு விடுகிறேன்.


இதுவே உலவியில் ரீதியான பதிலாகவும் இருக்கும்.


வேறு ஏதாவது 'விடயம்' இருந்தால் , இந்த காணொளியைப் பார்பவர்கள், 'கமெண்ட்' செய்ய கேட்டுக் கொள்கிறேன். சமூகமாக இருந்து சுமூகமாக என்ன செய்ய முடியும் என்பதைப் பார்ப்போம்.


மேலும் கோட்பாடுகளும் , சிந்தனைகளும் நாட்டுக்கு நாடு, இனத்துக்கு இனம் , அரசியலுக்கு அரசியல் வேறுபடும்.


அமெரிக்காவில் "பொருளதாரக் குற்றம்" பெரிய குற்றம். மேலும் ஒருவருடைய விருப்பத்தில் அல்லது சுகந்திரத்தில் தலையிட அரசுக்கும் உரிமை இல்லை.


ஆனால் , நம் நாட்டில் "தலை கீழ் ".


பொருளாதாரக் குற்றம் மன்னிக்கப்படுகிறது . தனிநபரின் அந்தரங்கம் பேசு பொருளாக மாறுகிறது.


வாழ்வியலும் , ஒழுக்கமும் பொருளாதாரத்தில் இருந்து மீட்கப் படவேண்டும்.


தெளிவு வரும் ; தெளிவோம் !!!.

ஆகச் சிறந்த காதல் :

 A)ஆகச் சிறந்த காதல் :



அந்த வீடு, இன்னும் எனக்கு ஞாபகம் இருக்கிறது; சுமார் 25ஆண்டுகளுக்கு முன்பு அழைப்பிதழின் பேரில் சென்றபோது அந்த வீடு பழைமை காத்தது. பெரிய திண்ணை. பிறகு முற்றம். நல்ல பரந்த வழிநடப்புகள்.


சிறிய அறை ; பெரிய சமையல் அறை. என்ன சொல்ல !!! அந்த வீட்டைப் பார்ப்பதற்காகவா சென்றான் சாமி ?


இல்லை; இல்லவே இல்லை. அந்த அழகை ,தேவதையை அவள் குடியிருக்கும் வீட்டில் பார்ப்பதற்கு ஏதோ சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொண்டு போக வேண்டிய தருணம் பார்த்து போனான் என்பது தான் உண்மை !


அந்த உரையாடல்கள், விதவை அம்மா, சகோதரன் கல்யாணம் ஆகவில்லை;கரிசனங்கள்; கவனிப்புகள் என்று எல்லாம் பிடித்து இருந்தது சாமிக்கு .


அப்போ , எதற்கு இந்த ஒப்பனை.எல்லாவற்றையும் அடுத்த நாள் சொல்லிவிட வேண்டியதுதான் என்று நினைத்து காத்து இருந்தான்.


அவளே சொன்னாள் : எனக்கு முறைப்படி வரும் ஞாயிறு பெண் கேட்டு வருகிறார்கள். அதற்காக முதல் நாள் சனிக்கிழமை நாங்கள் குடும்பமாக குலதெய்வ வழிபாடு செய்ய வேண்டி இருப்பதால் ' விடுப்பு வேண்டும்' என்று நீட்டினாள் கடிதத்தை.


சாமி, மேலாளர் அமோதித்தார்; அனுமதித்தார்; இதயம் கேட்டது :-

"இனிமேல் அப்படி சொல்லாதே என்று யாரை கேட்பது ?"


B)ஆகச் சிறந்த அரசியல் :


நன்றாகவே தெரியும், இந்த காரியத்தை செய்தால் எதிர்வினை இப்படித்தான் இருக்கும் என்று .



எதற்கும் தன் நெருங்கிய ,ரகசிய நபர்கள் சிலருடன் இதைப் பற்றி யோசித்து , இந்த source ஐ பயன்படுத்தி இந்த lead ஐ பிடித்து ஒரு அரசியல் செய்ய வேண்டும் என்று மேலிடம் சொல்வதாக பகடி அடினான் தலைவன்.


"ஏன், செய்தால் என்ன ? இதில் ஒன்றும் நமக்கு இழுக்கு " இல்லை என்று ஒரு சாரரும்; 'இருந்தாலும் நாமும் அக்கா, தங்கையுடன் பிறந்து இருக்கிறோம் எதற்கு இந்த வம்பு ' என்று மற்றொரு சாரரும் தங்கள் கருத்துக்களை முன் வைத்தனர்.


எல்லாம் "காலத்தால் மறக்கப்படும், அல்லது மறைக்கப்படும்" என்கிற 'நியதி' உண்மை என்பதை உணர்ந்த தலைவன் தன் "இரண்டு" செயலாளரிடமும் இப்படிச் சொன்னான்.


உங்கள் இருவரில் ஒருவர் நம் கட்சியை விட்டு விலகுவதாக அறிவித்து அதற்கு காரணம் "நீதி கேட்டேன் ; நிதி வந்தது " என்று சொல்ல வேண்டும் என்றும் ;அதற்கு மறுநாள் 'தான்' ஒரு press meet ஏற்பாடு செய்து அதற்கு விளக்கம் அளிப்பதாகவும் சொன்னார்.


இருவரும் கைநீட்டினர்- எவ்வளவு தொகை கொடுப்பதாக இருக்கிறீர்கள் !?


அடுத்த நாள் செய்தி :


அந்த உறுப்பினர்கள் இருவரும் கட்சியின் அடிப்படை பதவியில் இருந்து நீக்கப்பட்டனர்.



சிறுதுளிகள் :-

++++++++++


குளங்கள் குட்டைகள் அன்று மருதம்;


வீடுகள் விடுதிகள் இன்று ஆனது;


ஏரிகள் எல்லாம் எளிதாய் மாறிட,


மருதம் இனிமேல் பாலையாய் காண்பாய்!





காலங்கள் ; கோலங்கள்

+++++++++++++++++++



பகலில் வேடம் ; இரவில் ஆட்டம்,


இப்படிச் செய்தால் , எப்படிச் சொல்வது,


உழைத்து உண்ண கரங்கள் இருக்க;


வாயை விற்று வாழ்வது சாதலே !!!



Selvaraj raman