டீச்சர்… உங்களுக்கு என்னை ஞாபகமிருக்கா ?
சாலையோரமாக நடந்து சென்ற பவானி டீச்சரைக் பின்னால் இருந்து ஒருவர் அழைத்து கேட்டார்.
“யார்… புரியலையே.”
“டீச்சர், இந்த முகத்தை ஒருக்க கவனமாகப் பாருங்க.”
“விளையாடாதேடா, விஷயத்துக்கு வா. எனக்கு முன்னாடி மாதிரி இப்ப கண் பார்வை இல்லடா.”
“டீச்சருக்கு இந்தக் குரலும் அடையாளம் தெரியலையா?”
“இல்லைடா… இத்தனை ஆண்டுகளில் எத்தனை தலைமுறையை நான் பாடல் சொல்லிக் கொடுத்திருக்கேன் எத்தனை பேர் டா ஞாபகத்துல வச்சிருக்க முடியும்.?”
“96-வது பேட்ச்சில் படித்த ஜாஃபர், விஷ்ணு, ஜேக்கப் எல்லாம் டீச்சருக்கு ஞாபகம் இருக்கா?”
அந்த பேட்ச்சை நான் எப்படி மறக்க முடியும்? என் ஆசிரிய வாழ்க்கையில் அதைவிட பிடித்த ஒரு பேட்ச்சே இல்லை. சரி, நீ அந்த பேட்ச்சில் யார்?”
“டீச்சருக்கு அந்த பேட்ச்சிலிருந்த ‘திருடன்’ ஜேக்கப் ஞாபகத்துல இருக்கா?”
“ டேய், அவனை அப்படிச் சொல்லாதே. அவன் ஒரு பாவம். அவன் திருடன் இல்லை.”
டீச்சர் இன்னும் நீங்க அவனுக்கு தான் சப்போர்ட் பண்றீங்களா அவன் திருடுறதை நான் தான் பார்த்து இருக்கேனே அப்பவும் அவனுக்கு சப்போர்ட் பண்ணி காப்பாற்றி விட்டது நீங்க தானே
“ஆம், நான் அவனை காப்பாற்றினேன். ஏன்னா, அவனைப் பற்றி உங்களுக்கு தெரியாத பல விஷயங்கள் எனக்குத் தெரியும்.”
“அதென்ன டீச்சர்?”
“அவனுடைய வாழ்க்கை நிலை அப்போ அப்படித்தான் இருந்தது. வீட்டில் ஒரு வேளை உணவு கூட இல்லாத குடும்பம்.”
ஜேக்கப்பைப் பற்றி சொல்ல சொல்ல டீச்சரின் கண்கள் நிறைந்தது அவர் இறுதியில் அழ ஆரம்பித்தார்
“டீச்சர் அழாதீர்கள். டீச்சருடைய பிரார்த்தனைகள் வீணாகப் போகவில்லை.”
“ஏன் அப்படிச் சொல்கிறாய்? நீ அவனை பிறகு பார்த்தாயா?”
“டீச்சர்… அப்போ நான்காவது பெஞ்சில் உட்கார்ந்து டீச்சரைத் தொந்தரவு செய்த அந்த ‘திருடன்’ ஜேக்கப் நான்தான்.”
இதைக் கேட்டவுடன் டீச்சர் அவனை கட்டிப்பிடித்தார். அடக்க முடியாத மகிழ்ச்சியின் கண்ணீர் அவர் கண்களிலிருந்து தாரைதாரையாக வழிந்தது.
“சாமி, இதை நீ என்கிட்ட இவ்வளவு நேரம் ஏன் சொல்லவில்லை?”
“டீச்சருக்கு என்னைப் பற்றிய அந்தப் பழைய பாசம் இன்னும் நினைவிருக்கிறதா என்பதை அறியவே.”
“அப்படியா! சரி, நீ இப்படி வேஷம் போட்டிருக்கிறாய்? இப்போ என்ன வேலை செய்கிறாய்?”
“இது வேஷம் இல்லை டீச்சர். நான் இப்போது இந்த ஸ்டேஷனின் எஸ்.ஐ.”
“உண்மையாடா? நான் கேட்கிறது நிஜமா?”
டீச்சருக்கு நம்ப முடியவில்லை.
“ஆமாம் டீச்சர், நான் இப்போது ஒரு போலீஸ் அதிகாரி. ஒரு மிட்டாய் வாங்கித் தின்ன வேண்டும் என்ற ஆசையில் அப்போது எடுத்த அந்த ஐந்து ரூபாய், என்னை மற்றவர்களின் முன் ‘திருடன்’ ஆக்கியது. அன்றே என்னை ஏளனம் செய்தவர்களின் முன் ஒரு போலீஸ்காரனாக நிற்க வேண்டும் என்பதே என் மனத்தில் இருந்த கனவாக இருந்தது…”
-நண்பன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக